Friday, February 26, 2010

வழிகாட்டிய மாநபியின் வாழ்க்கை நெறியில் வழிநடப்போம்! - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

உலகத்திற்கு என்றும் தேவைப்பட்ட அமைதியும், சாந்தி சமாதானமும், சமூக நீதியும், பொருளாதார சமத்துவ வாழ்வும் வழங்கி உலக சமுதாயத்திற்கு புதியதோர் வழிகோலிய நெறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக்காட்டிய மனிதநேய மானிட மார்க்கமாகும்.
பெர்னாட்ஷா போன்ற உலக அறிஞர்கள் நபி வழியே நானிலத்தாருக்கு நல்வழியாக அமையும் என கூறியிருக் கிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஹஇஸ்லாமிய மார்க்கம், ஹகாணாமல் போன குழந்தை திருவிழாவில் கண்டெடுத்ததைப்போல் தென்னக மக்களால் அரவணைக்கப்பட்டது’ எனக் குறிப்பிட்டார்.

ஹஒன்றே குலம், ஒருவனே தேவன்’ ஹயாதும் ஊரே, யாவரும் கேளிர்’, ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் கொள்கையை இன்றைக்கு முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் நிலைநிறுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய நற்பெரும் மேன்மக்கள் வாழ்த்தி வரவேற்கும் வாழ்க்கை நெறியே வள்ளல் நபி நாயகம் அவர்கள் உலகத்தாருக்கு வழங்கிய நன்னெறியாகும். அந் நெறியில் எல்லோரும் உறுதி கொள்வோம்.

தமிழக அரசும், மத்திய அரசும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நாளை அரசு விடுமுறை தினங்களாக அறிவித்து கண்ணியப்படுத்தியுள்ளன. முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் நபிகள் நாயகத்தின் பெருமைகள் இந் நந்நாளில் போற்றப்படுகின்றன.
மனித குலத்திற்கே வழிகாட்டிய நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நெறியை பின்பற்றி நடக்க இந் நன்னாளில் உறுதியேற்போம்.

- பேராசிரியர் கே.எம். காதர் மொகின்,
தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு

No comments:

Post a Comment