Tuesday, March 30, 2010

அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகக்குழுக் கூட்டம்ி

அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. பேச்சு






துபையில் அமீரக காயிதெமில்லத் பேரவை யின் நிர்வாகக்குழுக் கூட் டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 27.03.2010 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக பேரவை யின் துணைத்தலைவர் களில் ஒருவரான காயல் நூஹு சாஹிப் இறை வசனங்களை ஓதினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற் புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற் றுள்ள நிர்வாகிகள் அத் தனைபேருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேரவை யின் பணிகள் சென்றடைய ஒத்துழைப்புகளை நல்கிட கேட்டுக் கொண்டார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத்தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் கே. எம். காதர் மொகி தீன் அவர்கள், புதிய நிர்வாகத்திற்கு தமிழ் மாநிலத்தின் அங்கீகாரத் தைத் தெரிவிப்பதுடன் அதற்கு வாழ்த்தினையும் தெரிவிப்பதாகக் கூறினார்.

காயிதெமில்லத் பேரவை ஆரம்பத்தில் ராஜகிரி தாவூத் பாட்சா தலைமையிலும், பின்னர் தற்போதைய வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தலைமையிலும், தற்போது குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. இது மூன்றாவது தலை முறை.

இதன் சிறப்பு என்ன வென்றால் பல்வேறு பொறுப்புக்கள் வழங்கப் பட்டு ஒரு இளந்தலை முறை இயக்கமாக பரிண மித்துள்ளது. ஒரு இயக்கம் தொடர வேண்டுமென் றால் இதுபோன்ற வளர்ச்சி இருப்பதன் மூலம் அது சிறப்படையும் என்றார். இப்பேரவை ஒரு குடும்பம் போன்றது. இதன் மூலம் நம்மால் ஆன நன்மை களைச் செய்ய வேண்டும்.

அமீரகத்தில் பணி களுக்காக வந்துள்ள நீங்கள் தங்களது தொழில் மற்றும் வேலை நேரம் போக தங்களால் முடிந்த ஓய்வு நேரத்தில் சிந்தித்து செயலாற்றினால் அமீரகம் முழுமைக்கும் இதன் வளர்ச்சி இருக்கும். இளை ஞர்களாகிய நீங்கள் வேகப் பட வேண்டியதில்லை. தலைவரின் வழிகாட்டு தலுடன் அமைதியான முறையில் செயலாற்ற வேண்டும்.

மாதம் ஒரு முறை நிர் வாகக்குழு கூடி பேரவை யின் வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை தீட்டி செயல்படவேண்டும். உறுப்பினர் சேர்க்கை யினை விரிவு படுத்த வேண்டும்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் விரைவில் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு துவங்க இருக் கிறது. இதில் தங்களது பகுதியினைச் சேர்ந்த வர்கள் கணக்கெடுப்பாளர் களுக்கு ஒத்துழைப்பு நல்கி அதில் நம்மவர்களது எண்ணிக்கை சரியான முறையில் இடம்பெற்றுள் ளதை கண்காணிக்க வேண்டும். மணிச்சுடர், பிறை மேடை மாதமிருமுறை இதழை அமீரகம் முழுவ தும் பரப்ப வேண்டும். யாரையும் கட்டாயப் படுத்தி வாங்க வைக்க முயற்சிக்க வேண்டாம். அமீரகத்தில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்லி ஆர்வமூட்டலாம்.

பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் காயிதெமில்லத் பேரவை களுக்கு அமீரக காயிதெ மில்லத் பேரவை முன் னோடியாக விளங்கி வரு கிறது. இதற்கு அதன் செயல்பாடுகளே சாட்சி.

முஸ்லிம் லீக் என்பது யாருடைய சொத்தும் அல்ல. இதில் அனைவரும் இணைந்து வலுப்படுத்திட முன்வரவேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் உரை நிகழ்த்தினார்.

துபாய் பகுதி செயலா ளர் அய்யம்பேட்டை வாலன் சுலைமான் அமீர கத்தில் உள்ள பல்வேறு ஜமாஅத்களை ஒருங் கிணைத்து பைத்துல்மால் உள்ளிட்ட பல சேவை களைச் செய்திட வேண்டி யதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

செயலாளர் வழுத்தூர் முஹைதீன் பாட்சா தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை இளைஞர் அணிச்செயலாளராக செயல்பட்டபோது உள்ள நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

ஊடகத்துறை செயலா ளர் முதுவை ஹிதாயத் பிறைமேடை மாதமிரு முறை இதழை அமீரக மெங்கும் சென்றடைவ தற்குரிய செயல்திட்டங்கள் குறித்துப் பேசினார். ஊட கங்களில் தாய்ச்சபையின் பணிகள் குறித்து செய்தி களை வெளியிட வேண்டி யதன் அவசியம் உள்ளிட் டவை குறித்து விவரித்தார். பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் பேர வைக்கு நிதி திரட்ட வேண்டிய அணுகுமுறை கள் விவரித்து விவரித்தார்.

செயலாளர்கள் லால் பேட்டை அப்துல் ரஹ் மான் (அபுதாபி), கீழக்கரை ஹமீது யாசின், அய்யம் பேட்டை ராஜாஜி காஸிம், பரங்கிப்பேட்டை ரியாஸ் அஹமத், கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, சோனாப் பூர் முஹம்மது ரஃபி, முத்துப்பேட்டை அப்துஸ் ஸலாம், ஆடிட்டர் அப்துல் கத்தீம், ஊடகத்துறை ஒருங் கிணைப்பாளர் தஞ்சை பாட்சாகனி, அதிரை ஷர் புதீன், துணைத் தலை வர்கள் காயல் நூஹு சாஹிப், முதுவை சம்சுதீன், ஆலோசனைக்குழு உறுப் பினர் அப்துல் லத்தீப், நஜீர் உள்ளிட்ட பலர் பேசி னர்.

பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்து நடத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

(அமீரகத்திலிருந்து நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத் )
ஈஈPசநஎழைரள

31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் தேசிய பொருளியல் ஆய்வுக்குழு அறிவிப்பு

இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொரு ளியல் ஆய்வுக் குழுவின் (என்.சி.ஏ.இ.ஆர்) ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நிறுவனம் மேற் கொண்ட ஆய்வில் 10 முஸ்லிம்களில் 3 பேர் வறு மைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள் ளது. அவர்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ. 550க்கும் குறைவாக உள்ள தாக அந்த ஆய்வு கூறுகிறது.

முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், மதம் மாறிய தாழ்த்தப் பட்டவர்கள் ஆகியோருக் கும் கல்வி வேலைவாய்ப்பு களில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா குழுவும் ஏற்கெனவே அரசுக்கு பரிந் துரை செய்து அறிக்கை அளித்திருந்தது. இந்த சூழ் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தின் மதிப் பீட்டின் படி, கிராமப்புற மக்களில் தனி நபர் மாத வருமானம் ரூ.356க்கு கீழும், நகர்ப்புற மக்களின் தனி நபர் மாத வருமானம் ரூ.538க்கு கீழும் இருந்தால் அவர்கள் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளவர்களாவர். அந்த ஆய்வில் மேலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:

2004-05 ஆண்டு நிலவ ரப்படி வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ள கிராமப்புற முஸ்லிம்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ.338ஆக இருந்தது. பழங் குடி மக்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் 50 சதவீதம் பேர் உள்ளனர். தாழ்த்தப் பட்டவர்களில் 32 சதவீத மக்களும் அதற்கு அடுத்த படியாக முஸ்லிம்களில் 31 சதவீத மக்களும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

பழங்குடியினரின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 20 ஆயிரம். தாழ்த்தப்பட்டவர்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 22,800. இதர பிற்பட்ட மக்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.26,091 முஸ்லிம்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.28,500 முஸ் லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

முஸ்லிம் களில் பெரும் பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில் களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்ற னர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 13 கோடியே 80 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாக கடந்த 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் தெரியவந்தது. இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு

அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.

அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார். ஏற்புரை நிகழ்த்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனைகளுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில்; தலைவர் பேராசிரியர் பேச்சு






அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வௌ;ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன்றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத்தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.

பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹு சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.

கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.

முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக்கும் பாணி.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கினோம்.

முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர். அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.

முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணியில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத்திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட்டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.

(அமீரகத்திலிருந்து நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத் )

தலைவர் பேராசிரியரின் அபுதாபி புகைப்படம்





IUML Flag

Wednesday, March 3, 2010

மேட்டுப்பாளையம் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு




மேட்டுப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீலாது நபி பொதுக் கூட்டம் 27-02-2010 அன்று பெரிய பள்ளிவாசல் மீலாது திடலில் நகர தலைவர் டி. ஷாஜஹான் தலைமையில் டாக்டர் ஜக்கரிய்யா, வளர்மதி அமீர் அம்ஜா, எம்.இ. அயூப், அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடபெற்றது.
நகர துணைத்தலைவர் எஸ்.எம். அய்யூப் வரவேற்றார் - மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். அப்துல் ஜலீல், திருப்பூர் பி.எஸ்.ஹம்சா, மாவட்ட தலைவர் எஸ்.எம். காசிம், செயலாளர் பி.எஸ்.எம் உசேன், முன்னாள் மாவட்ட தலைவர் பி.எஹச். முஹம்மது குட்டி, உமாக்கள் அணி அமைப்பாளர் மௌலவி ஏ.எம் சுல்தான், மௌலவி இப்றாஹிம் , மௌலவி ஏ.எம் ஜாபர் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திண்டுக்கல் மௌலவி ஏ.எஸ்.எம் முஹம்மது ஹாரூன், கோவை மௌலவி எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லிக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றியபோது கூறியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பன்நெடுங்காலமாக நடைபெற்று வரும் மீலாது நபி விழாக்களில் இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்புக்களையும் , மாநபியின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாத்தின் வாழ்வியல் ஷரீஅத், ஷரீஅத் சட்டத்தை நிலைநிறுத்திடும் தாய்ச்சபை பணிகளை எடுத்து கூறுவதை கடமையாக கருதுகிறோம்.
அன்று ஆயிரத்தி ஐனூறு வருடங்களுக்கு முன் அரேபிய பாலைவனத்தில் மக்கள் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். கிட்டதட்ட முன்னூற்று அறுபது தெய்வங்களை வணங்கி வந்தனர். மடமை நிறைந்த அக்காலத்தில் பெண் அடிமைத்தனம், குலப்பெருமையால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை, ஒழுக்கமற்ற வாழ்க்கை என்று வாழ்வில் எல்லா நிலைகளிலும் அக்காலத்து மக்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மடமை காலக்தினர் என்று அழைக்கப்பட்டனர். மதங்களை மூன்று விதமாக பிரிக்கலாம், வேதம் வழங்கப்பட்ட மார்க்கங்கள், ஆரிய மதங்கள் மற்றும் ஆரியமல்லாத மதங்கள்.
இறை தூதர்களை தீர்க்கதரிசிகளாக ஏற்றுக் கொண்ட மதங்கள் செமிஸ்டிக் மதங்கள். நூகு நபியின் மகன் சாம் மற்றும் , இப்ராஹிம் நபியின் வழிவந்த தாவூத் நபி, மூசா நபி, ஈசா நபி, இறுதியாக முஹம்மது (ஸல்) ஆகியோரை நபிகளாக கொண்டதை செமிஸ்டிக் மதங்கள் என்று கூறுவர். இறை தூதர்களை, வேதங்களை பற்றி ஞானம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் ஆரம்ப குர்ஆன் மத்ரஸாக்களில் குழந்தைகளுக்கு """"தவ்ராத் மூஸா அப்ரானி, ஜபூர் தாவுத் யூனானி, இன்ஜில் ஈசா சுர்யானி புர்கான் முஹம்மது அரபானி’’ என பாடலாக கற்றுக் கொடுப்பார்கள்.வேதங்கள் கொடுக்கப்பட்ட இறை தூதர்களான மூஸா நபிக்கு தவ்ராத் வேதம் அப்ரானி மொழியிலும், தாவுத் நபிக்கு ஜபூர் வேதம் யூனானி மொழியிலும், ஈசா நபிக்கு இன்ஜீல் வேதம் சுர்யானி (ஹிப்ரூ) மொழியிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு புர்கான் (குர்ஆன்) வேதம் அரபி மொழியிலும் இறைவனால் மக்களை நேர் வழிப்படுத்திட அருளப்பட்டது. இம்மதங்கள் அனைத்திலும் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையை பற்றி கூறப்பட்டிருக்கின்றது.

கி.மு.1500 முதல் 2000 ஈரான் மற்றும் இந்தியாவின் வடக்கில் தோன்றியது ஆரிய மதங்களாகும். வைதீக, பிராமன இந்து மதங்கள் ஒரு பிரிவு, சீக்கிய, ஜைன, சமண மதங்கள் மற்றொன்று நெருப்பை வணங்கும் (மஜீஸிகள்) பெர்சியாவில் தோன்றிய ஜொராஸ்டிரரால் தோற்றுவிக்கப்பட்ட ஜொராஸ்டிரிய மதம்.
ஆரியமல்லாத மதங்களான சீனாவில் கன்பீசியனிஸால் தோற்றுவிக்கப்பட்ட கன்பீயூனிசம், சீனாவின் லவ்தாவேவால் தோற்றுவிக்கப்பட்ட தாவாயிசம் மற்றும் ஜப்பானின் சின்தோயிசம் இப்படியாக மூன்று விதமான மதங்கள் இருக்கின்றன.
அனைத்து மதங்களிலுமே பல்வேறு கோணங்களில் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை குறித்து முன் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. ரிக் வேதத்தில் சுஸ்ரமா (புகழப்பட்டவர்), அதர்வண வேதத்தில் உலகில் மத்திய பகுதியில் (மக்காவில்) தோன்றுவார், பவிஷ்ய புராணத்தில் மனித குலத்தின் மாந்தராக இருப்பார், சாம வேதத்தில் அஹ்மது என்பவர் இறைவனால் இணையில்லாத அறிவை பெற்றவராக இருப்பார் என குறிப்பிடப்பட்டிருப்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றியே கூறப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
திருக்குர்ஆன் வசனங்களும் """"நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது’’ , """" எவரும் தம் குழந்தைகளை சந்தேகமில்லாமல் அறிவதைப் போல் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதர் தான் என நன்கறிவார்கள்’’ என்றும் கூறகின்றது.
கி.பி 610 ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காமா நகரின் தூர்சினா மலை ஹிரா குன்றில் தவமிருந்தார்கள். அவர்களுக்குள் பல விதமான கேள்விகள், நான் யார் ?, உலகை படைத்தது யார்?, உலகில் ஏன் வாழ்கிறோம் ?, வாழ்க்கை என்றால் என்ன ?, மரணம் என்றால் என்ன ? எம் நம்பிக்கை என்ன? நான் என்ன செய்ய வேண்டும்? இவ்வனைத்திற்கும் விடை அளிப்பதாகவே திருக்குர்ஆன் அருளப்பட்டது.
நபிகள் நாயகம் மனித குலத்திற்கு அருட்கொடையாக, வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்கின்றார்கள். மடமை காலத்து அரபு மக்களை உலகம் போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மக்கள் என போற்றும் அளவிற்கு உயர்த்தினார்கள். நபித்துவம் பெறுவதற்கு முன்பே அல்அமீன் உண்மையாளர் என நபிகளார் போற்றப்பட்டார். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் கூட தங்கள் பொருளை பாதுகாக்க நபிகளாரையே நாடினார். பெண்களுக்கு சொத்துரிமை, விதவைகளுக்கு மறுமணம், பெண்கள் இஸ்லாத்தின் கண்கள் என்று போற்றும் அளவிற்கு பெண் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம்.
இறைவன் வகுத்தளித்த சட்டமும், நபிகளாரின் வாழ்க்கை நெறியும் நமக்கு இருக்கின்றது. இந்த நன்முறை தான் ஷரீஅத் சட்டம். இச்சட்டத்தை இந்திய இஸ்லாமிய சமுதாயம் பேணி வாழ்வதற்கு பணியாற்றி வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இன்று சிலர் முஸ்லிம் லீக் என்ன செய்தது? எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாய்மூடிகள், அரசிற்கு பணிந்து பேசுபவர்கள் என்று விபரம் தெரியாமல் கூற தலைப்பட்டிருப்பதை அறிகிறோம். சிலருக்கு இதுவே வாடிக்கையாக இருக்கின்றது, உண்மைதான் வெல்லும். சுதந்திரத்திற்கு முன்பே இந்த நாட்டில் வக்ஃப் சட்டத்தை அறிமுகப்படுத்திய இயக்கம் முஸ்லிம் லீகும் தலைவர் காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னா சாகிப். அரசியல் நிர்ணய சபையின் ஷரீஅத் பாதுகாப்பிற்கு , சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நிலைகளிலும் உரிமைக்குரல் எழுப்பியவர்கள் காயிதெ மில்லத், பேக்கர் சாகிப் போன்றோர். டில்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா, அலிகர் சர்வ கலாசாலை கல்வி ஸ்தாபனங்களின் சிறுபான்மை முஸ்லிம் அந்தஸ்து நிலைபெற போராடியவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப்.
ஷாபானா வழக்கில் ஷரிஅத் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு வந்தபோது பல மணி நேரம் பாராளுமன்றத்தில் வாதாடி தனி நபர் மசோதாவாக கொண்ட வரப்பட்ட பனாத்வாலா பில் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள செய்த பெருமை முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாகிபை சாரும். சென்ற பாராளுமன்றத்தில் அனைத்து முஸ்லிம் எம்.பிக்களையும் பாரத பிரதமரிடம் அழைத்து சென்று இந்திய முஸ்லிம்களிள் கல்வி மற்றும் பொருளாதார உண்மை நிலையை வெளிபடுத்திய சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் அமைக்கப்பட்டதோடு மத்தியில் சிறுபான்மையினருக்கான தனி அமைச்சரகம் உருவாக காரணமாக இருந்தவர் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப்,
இன்றைய தேசிய தலைவர் இ. அஹ்மதின் முயற்சியால் இந்திய - அரபு உறவு மேம்படுத்தப்பட்டது, பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் லிபரான் கமிஷன் அறிக்கை மூலம் அனைவரும் தெரிந்திருக்கின்றனர். இவை அனைத்தும் எதோ நான் மேடைபேச்சுக்காக கூறுபவையல்ல, அனைத்தும் பாராளுமன்ற அவை குறிப்பில் எழுதப்பட்டிருக்கும் உண்மை .
அனைத்து நிலைகளிலும் பின்தங்கியிருக்க கூடிய சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருவது பாராட்டுக்குரியது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் தான் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்களின் நண்பன் என கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் 30 ஆண்டுகள் அங்கு ஆட்சியில் இருந்தும் என்ன பயன். ஆனால் 1959 ஆண்டிலேயே முஸ்லிம் லீக் அதிகாரத்தில் இருந்த கேரளத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விட்டது.
உலமா பெருமக்களை போற்றி கண்ணியப்படுத்துகின்ற இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 1958 ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டில் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே ஜமாஅத்துல் உலமா சபை, அம்மாநாட்டில் தான் அல்லாமா அமானி ஹஜ்ரத் உலமா சபை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வாகும்.
கட்டாய திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட விஷயத்தில் முஸ்லிம் லீகும் , ஜமாஅத்துல் உலமா சபையும் இரண்டு வேறு குரலாக பேசுவது போல் சிலர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர், அவர்களின் பகல் கனவு பலிக்கவில்லை இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஜமாஅத்துல் உலமா சபையும் ஒன்றினைந்தே ஷரிஅத் பாதுகாப்பு போராட்டம் உள்ளிட்ட மார்க்க விஷயங்களில் போராடி வெற்றி கண்டிருக்கின்றோம். இவ்விரண்டு அமைப்புகளும் சமுதாயத்தின் இரட்டை குலல் துப்பாக்கிகள் என்பதை உறுதியிட்டு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். யாரும் குழப்பம் அடைய தேவையில்லை.
கட்டாய திருமணச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டபோது அனைத்து அமைப்பினரையும் அழைத்து முதலில் முஸ்லிம் லீக் சார்பிலேயே கலத்தாலோசனை செய்யப்பட்டது.
சட்டமன்றத்திலும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏக்கள் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் தமிழக அரசு கலந்தாலோசனைகள் செய்ய வேண்டுமென பேசியிருக்கின்றனர். தொடர்ந்து பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வாயிலாகவும் தாய்ச்சபையின் நிலையை அரசிற்கு தெரிவித்திருக்கின்றோம். ஆத்திரப்பட்டோ, அவசரப்பட்டோ நம்மால் எதையும் சாதிக்க முடியாது அறிவுப்பூர்வமாக மதி நுட்பத்துடன் சட்ட ஆலோசனைப் பெற்று தீர்த்தமாக முடிவு எடுக்கலாம் என்ற அடிப்படையில் இன்று அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன. அடுத்த வாரம் தமிழக சட்ட அமைச்சர் உள்ளிட்ட சிறுபான்மை நல அதிகாரிகளுடனும், தொடர்ந்து முதல்வர் அவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள், ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் நடைபெற்று வருகின்றது. நம் ஐயப்பாடுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் தி.மு.க. பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மத்திய அரசு பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கென 2600 கோடி ரூபாய் வழங்கி இருப்பதற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். அரசின் திட்டங்கள் முழுமையாக நம் சமுதாயத்திற்கு சென்றடைய வேண்டுமென்றால் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் ,மஹல்லா ஜமாஅத்தினரும் முனைப்போடு பணிகளாற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை பெறுவதிலும், சிறு தொழில் உதவி , மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட அரசு திட்டங்கள் நாமும் அறிந்து சமுதாயத்தினரை பலனடையச் செய்ய வேண்டும்.
42 ஆண்டு காலமாக தொய்வின்றி இங்கு மீலாது பெருவிழா நடத்தி வரும் மேட்டுப்பாளையம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்விழாக்களில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளோடு சமூக நலப்பணிகளையும் செய்திட அன்புடன் வேண்டுகிறேன். முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணியில் கவனம் செலுத்தி, ஏற்கனவே 4 ஆயிரம் இருந்த இந்த ஊரில் குறைத்தது 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் . தலைமையின் ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு இருக்கும் என்பதை தெரிவித்து நிறைவு செய்கின்றேன்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசினார். நகர செயலாளர் அக்பர் அலி நன்றி வறி திண்டுக்கல் மௌலவி ஹாரூன் ராஷீத் தஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.