Tuesday, March 30, 2010

31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் தேசிய பொருளியல் ஆய்வுக்குழு அறிவிப்பு

இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொரு ளியல் ஆய்வுக் குழுவின் (என்.சி.ஏ.இ.ஆர்) ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நிறுவனம் மேற் கொண்ட ஆய்வில் 10 முஸ்லிம்களில் 3 பேர் வறு மைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள் ளது. அவர்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ. 550க்கும் குறைவாக உள்ள தாக அந்த ஆய்வு கூறுகிறது.

முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், மதம் மாறிய தாழ்த்தப் பட்டவர்கள் ஆகியோருக் கும் கல்வி வேலைவாய்ப்பு களில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா குழுவும் ஏற்கெனவே அரசுக்கு பரிந் துரை செய்து அறிக்கை அளித்திருந்தது. இந்த சூழ் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தின் மதிப் பீட்டின் படி, கிராமப்புற மக்களில் தனி நபர் மாத வருமானம் ரூ.356க்கு கீழும், நகர்ப்புற மக்களின் தனி நபர் மாத வருமானம் ரூ.538க்கு கீழும் இருந்தால் அவர்கள் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளவர்களாவர். அந்த ஆய்வில் மேலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:

2004-05 ஆண்டு நிலவ ரப்படி வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ள கிராமப்புற முஸ்லிம்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ.338ஆக இருந்தது. பழங் குடி மக்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் 50 சதவீதம் பேர் உள்ளனர். தாழ்த்தப் பட்டவர்களில் 32 சதவீத மக்களும் அதற்கு அடுத்த படியாக முஸ்லிம்களில் 31 சதவீத மக்களும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

பழங்குடியினரின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 20 ஆயிரம். தாழ்த்தப்பட்டவர்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 22,800. இதர பிற்பட்ட மக்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.26,091 முஸ்லிம்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.28,500 முஸ் லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

முஸ்லிம் களில் பெரும் பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில் களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்ற னர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 13 கோடியே 80 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாக கடந்த 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் தெரியவந்தது. இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

No comments:

Post a Comment