Thursday, July 15, 2010

Thursday, April 1, 2010

லால்பேட்டை தளபதி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு சேவை செம்மல் விருது


அதிரை நகரில் நடைபெறும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்

சேவைச் செம்மல் விருது பெரும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேவையில்
பொன்விழாக் கண்டவரும்
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களால்
முஸ்லிம் லீக்கின் தளபதியாக
அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருமான
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்
மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை

வாழ்த்தி பாரட்டுகிறோம்
அன்புடன் வாழ்த்தும் வெளிநாடு வாழ் லால்பேட்டை அன்பர்கள்

Tuesday, March 30, 2010

அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகக்குழுக் கூட்டம்ி

அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. பேச்சு






துபையில் அமீரக காயிதெமில்லத் பேரவை யின் நிர்வாகக்குழுக் கூட் டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் 27.03.2010 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக பேரவை யின் துணைத்தலைவர் களில் ஒருவரான காயல் நூஹு சாஹிப் இறை வசனங்களை ஓதினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற் புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற் றுள்ள நிர்வாகிகள் அத் தனைபேருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேரவை யின் பணிகள் சென்றடைய ஒத்துழைப்புகளை நல்கிட கேட்டுக் கொண்டார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத்தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் கே. எம். காதர் மொகி தீன் அவர்கள், புதிய நிர்வாகத்திற்கு தமிழ் மாநிலத்தின் அங்கீகாரத் தைத் தெரிவிப்பதுடன் அதற்கு வாழ்த்தினையும் தெரிவிப்பதாகக் கூறினார்.

காயிதெமில்லத் பேரவை ஆரம்பத்தில் ராஜகிரி தாவூத் பாட்சா தலைமையிலும், பின்னர் தற்போதைய வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தலைமையிலும், தற்போது குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. இது மூன்றாவது தலை முறை.

இதன் சிறப்பு என்ன வென்றால் பல்வேறு பொறுப்புக்கள் வழங்கப் பட்டு ஒரு இளந்தலை முறை இயக்கமாக பரிண மித்துள்ளது. ஒரு இயக்கம் தொடர வேண்டுமென் றால் இதுபோன்ற வளர்ச்சி இருப்பதன் மூலம் அது சிறப்படையும் என்றார். இப்பேரவை ஒரு குடும்பம் போன்றது. இதன் மூலம் நம்மால் ஆன நன்மை களைச் செய்ய வேண்டும்.

அமீரகத்தில் பணி களுக்காக வந்துள்ள நீங்கள் தங்களது தொழில் மற்றும் வேலை நேரம் போக தங்களால் முடிந்த ஓய்வு நேரத்தில் சிந்தித்து செயலாற்றினால் அமீரகம் முழுமைக்கும் இதன் வளர்ச்சி இருக்கும். இளை ஞர்களாகிய நீங்கள் வேகப் பட வேண்டியதில்லை. தலைவரின் வழிகாட்டு தலுடன் அமைதியான முறையில் செயலாற்ற வேண்டும்.

மாதம் ஒரு முறை நிர் வாகக்குழு கூடி பேரவை யின் வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை தீட்டி செயல்படவேண்டும். உறுப்பினர் சேர்க்கை யினை விரிவு படுத்த வேண்டும்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் விரைவில் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு துவங்க இருக் கிறது. இதில் தங்களது பகுதியினைச் சேர்ந்த வர்கள் கணக்கெடுப்பாளர் களுக்கு ஒத்துழைப்பு நல்கி அதில் நம்மவர்களது எண்ணிக்கை சரியான முறையில் இடம்பெற்றுள் ளதை கண்காணிக்க வேண்டும். மணிச்சுடர், பிறை மேடை மாதமிருமுறை இதழை அமீரகம் முழுவ தும் பரப்ப வேண்டும். யாரையும் கட்டாயப் படுத்தி வாங்க வைக்க முயற்சிக்க வேண்டாம். அமீரகத்தில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்லி ஆர்வமூட்டலாம்.

பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் காயிதெமில்லத் பேரவை களுக்கு அமீரக காயிதெ மில்லத் பேரவை முன் னோடியாக விளங்கி வரு கிறது. இதற்கு அதன் செயல்பாடுகளே சாட்சி.

முஸ்லிம் லீக் என்பது யாருடைய சொத்தும் அல்ல. இதில் அனைவரும் இணைந்து வலுப்படுத்திட முன்வரவேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் உரை நிகழ்த்தினார்.

துபாய் பகுதி செயலா ளர் அய்யம்பேட்டை வாலன் சுலைமான் அமீர கத்தில் உள்ள பல்வேறு ஜமாஅத்களை ஒருங் கிணைத்து பைத்துல்மால் உள்ளிட்ட பல சேவை களைச் செய்திட வேண்டி யதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

செயலாளர் வழுத்தூர் முஹைதீன் பாட்சா தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை இளைஞர் அணிச்செயலாளராக செயல்பட்டபோது உள்ள நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

ஊடகத்துறை செயலா ளர் முதுவை ஹிதாயத் பிறைமேடை மாதமிரு முறை இதழை அமீரக மெங்கும் சென்றடைவ தற்குரிய செயல்திட்டங்கள் குறித்துப் பேசினார். ஊட கங்களில் தாய்ச்சபையின் பணிகள் குறித்து செய்தி களை வெளியிட வேண்டி யதன் அவசியம் உள்ளிட் டவை குறித்து விவரித்தார். பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் பேர வைக்கு நிதி திரட்ட வேண்டிய அணுகுமுறை கள் விவரித்து விவரித்தார்.

செயலாளர்கள் லால் பேட்டை அப்துல் ரஹ் மான் (அபுதாபி), கீழக்கரை ஹமீது யாசின், அய்யம் பேட்டை ராஜாஜி காஸிம், பரங்கிப்பேட்டை ரியாஸ் அஹமத், கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, சோனாப் பூர் முஹம்மது ரஃபி, முத்துப்பேட்டை அப்துஸ் ஸலாம், ஆடிட்டர் அப்துல் கத்தீம், ஊடகத்துறை ஒருங் கிணைப்பாளர் தஞ்சை பாட்சாகனி, அதிரை ஷர் புதீன், துணைத் தலை வர்கள் காயல் நூஹு சாஹிப், முதுவை சம்சுதீன், ஆலோசனைக்குழு உறுப் பினர் அப்துல் லத்தீப், நஜீர் உள்ளிட்ட பலர் பேசி னர்.

பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்து நடத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

(அமீரகத்திலிருந்து நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத் )
ஈஈPசநஎழைரள

31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் தேசிய பொருளியல் ஆய்வுக்குழு அறிவிப்பு

இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொரு ளியல் ஆய்வுக் குழுவின் (என்.சி.ஏ.இ.ஆர்) ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நிறுவனம் மேற் கொண்ட ஆய்வில் 10 முஸ்லிம்களில் 3 பேர் வறு மைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள் ளது. அவர்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ. 550க்கும் குறைவாக உள்ள தாக அந்த ஆய்வு கூறுகிறது.

முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், மதம் மாறிய தாழ்த்தப் பட்டவர்கள் ஆகியோருக் கும் கல்வி வேலைவாய்ப்பு களில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா குழுவும் ஏற்கெனவே அரசுக்கு பரிந் துரை செய்து அறிக்கை அளித்திருந்தது. இந்த சூழ் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தின் மதிப் பீட்டின் படி, கிராமப்புற மக்களில் தனி நபர் மாத வருமானம் ரூ.356க்கு கீழும், நகர்ப்புற மக்களின் தனி நபர் மாத வருமானம் ரூ.538க்கு கீழும் இருந்தால் அவர்கள் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளவர்களாவர். அந்த ஆய்வில் மேலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:

2004-05 ஆண்டு நிலவ ரப்படி வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ள கிராமப்புற முஸ்லிம்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ.338ஆக இருந்தது. பழங் குடி மக்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் 50 சதவீதம் பேர் உள்ளனர். தாழ்த்தப் பட்டவர்களில் 32 சதவீத மக்களும் அதற்கு அடுத்த படியாக முஸ்லிம்களில் 31 சதவீத மக்களும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

பழங்குடியினரின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 20 ஆயிரம். தாழ்த்தப்பட்டவர்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 22,800. இதர பிற்பட்ட மக்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.26,091 முஸ்லிம்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.28,500 முஸ் லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

முஸ்லிம் களில் பெரும் பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில் களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்ற னர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 13 கோடியே 80 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாக கடந்த 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் தெரியவந்தது. இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு

அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.

அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார். ஏற்புரை நிகழ்த்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனைகளுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில்; தலைவர் பேராசிரியர் பேச்சு






அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வௌ;ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன்றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத்தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.

பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹு சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.

கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.

முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக்கும் பாணி.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கினோம்.

முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர். அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.

முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணியில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத்திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட்டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.

(அமீரகத்திலிருந்து நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத் )

தலைவர் பேராசிரியரின் அபுதாபி புகைப்படம்





IUML Flag

Wednesday, March 3, 2010

மேட்டுப்பாளையம் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு




மேட்டுப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீலாது நபி பொதுக் கூட்டம் 27-02-2010 அன்று பெரிய பள்ளிவாசல் மீலாது திடலில் நகர தலைவர் டி. ஷாஜஹான் தலைமையில் டாக்டர் ஜக்கரிய்யா, வளர்மதி அமீர் அம்ஜா, எம்.இ. அயூப், அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடபெற்றது.
நகர துணைத்தலைவர் எஸ்.எம். அய்யூப் வரவேற்றார் - மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். அப்துல் ஜலீல், திருப்பூர் பி.எஸ்.ஹம்சா, மாவட்ட தலைவர் எஸ்.எம். காசிம், செயலாளர் பி.எஸ்.எம் உசேன், முன்னாள் மாவட்ட தலைவர் பி.எஹச். முஹம்மது குட்டி, உமாக்கள் அணி அமைப்பாளர் மௌலவி ஏ.எம் சுல்தான், மௌலவி இப்றாஹிம் , மௌலவி ஏ.எம் ஜாபர் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திண்டுக்கல் மௌலவி ஏ.எஸ்.எம் முஹம்மது ஹாரூன், கோவை மௌலவி எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லிக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றியபோது கூறியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பன்நெடுங்காலமாக நடைபெற்று வரும் மீலாது நபி விழாக்களில் இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்புக்களையும் , மாநபியின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாத்தின் வாழ்வியல் ஷரீஅத், ஷரீஅத் சட்டத்தை நிலைநிறுத்திடும் தாய்ச்சபை பணிகளை எடுத்து கூறுவதை கடமையாக கருதுகிறோம்.
அன்று ஆயிரத்தி ஐனூறு வருடங்களுக்கு முன் அரேபிய பாலைவனத்தில் மக்கள் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். கிட்டதட்ட முன்னூற்று அறுபது தெய்வங்களை வணங்கி வந்தனர். மடமை நிறைந்த அக்காலத்தில் பெண் அடிமைத்தனம், குலப்பெருமையால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை, ஒழுக்கமற்ற வாழ்க்கை என்று வாழ்வில் எல்லா நிலைகளிலும் அக்காலத்து மக்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மடமை காலக்தினர் என்று அழைக்கப்பட்டனர். மதங்களை மூன்று விதமாக பிரிக்கலாம், வேதம் வழங்கப்பட்ட மார்க்கங்கள், ஆரிய மதங்கள் மற்றும் ஆரியமல்லாத மதங்கள்.
இறை தூதர்களை தீர்க்கதரிசிகளாக ஏற்றுக் கொண்ட மதங்கள் செமிஸ்டிக் மதங்கள். நூகு நபியின் மகன் சாம் மற்றும் , இப்ராஹிம் நபியின் வழிவந்த தாவூத் நபி, மூசா நபி, ஈசா நபி, இறுதியாக முஹம்மது (ஸல்) ஆகியோரை நபிகளாக கொண்டதை செமிஸ்டிக் மதங்கள் என்று கூறுவர். இறை தூதர்களை, வேதங்களை பற்றி ஞானம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் ஆரம்ப குர்ஆன் மத்ரஸாக்களில் குழந்தைகளுக்கு """"தவ்ராத் மூஸா அப்ரானி, ஜபூர் தாவுத் யூனானி, இன்ஜில் ஈசா சுர்யானி புர்கான் முஹம்மது அரபானி’’ என பாடலாக கற்றுக் கொடுப்பார்கள்.வேதங்கள் கொடுக்கப்பட்ட இறை தூதர்களான மூஸா நபிக்கு தவ்ராத் வேதம் அப்ரானி மொழியிலும், தாவுத் நபிக்கு ஜபூர் வேதம் யூனானி மொழியிலும், ஈசா நபிக்கு இன்ஜீல் வேதம் சுர்யானி (ஹிப்ரூ) மொழியிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு புர்கான் (குர்ஆன்) வேதம் அரபி மொழியிலும் இறைவனால் மக்களை நேர் வழிப்படுத்திட அருளப்பட்டது. இம்மதங்கள் அனைத்திலும் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையை பற்றி கூறப்பட்டிருக்கின்றது.

கி.மு.1500 முதல் 2000 ஈரான் மற்றும் இந்தியாவின் வடக்கில் தோன்றியது ஆரிய மதங்களாகும். வைதீக, பிராமன இந்து மதங்கள் ஒரு பிரிவு, சீக்கிய, ஜைன, சமண மதங்கள் மற்றொன்று நெருப்பை வணங்கும் (மஜீஸிகள்) பெர்சியாவில் தோன்றிய ஜொராஸ்டிரரால் தோற்றுவிக்கப்பட்ட ஜொராஸ்டிரிய மதம்.
ஆரியமல்லாத மதங்களான சீனாவில் கன்பீசியனிஸால் தோற்றுவிக்கப்பட்ட கன்பீயூனிசம், சீனாவின் லவ்தாவேவால் தோற்றுவிக்கப்பட்ட தாவாயிசம் மற்றும் ஜப்பானின் சின்தோயிசம் இப்படியாக மூன்று விதமான மதங்கள் இருக்கின்றன.
அனைத்து மதங்களிலுமே பல்வேறு கோணங்களில் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை குறித்து முன் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. ரிக் வேதத்தில் சுஸ்ரமா (புகழப்பட்டவர்), அதர்வண வேதத்தில் உலகில் மத்திய பகுதியில் (மக்காவில்) தோன்றுவார், பவிஷ்ய புராணத்தில் மனித குலத்தின் மாந்தராக இருப்பார், சாம வேதத்தில் அஹ்மது என்பவர் இறைவனால் இணையில்லாத அறிவை பெற்றவராக இருப்பார் என குறிப்பிடப்பட்டிருப்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றியே கூறப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
திருக்குர்ஆன் வசனங்களும் """"நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது’’ , """" எவரும் தம் குழந்தைகளை சந்தேகமில்லாமல் அறிவதைப் போல் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதர் தான் என நன்கறிவார்கள்’’ என்றும் கூறகின்றது.
கி.பி 610 ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காமா நகரின் தூர்சினா மலை ஹிரா குன்றில் தவமிருந்தார்கள். அவர்களுக்குள் பல விதமான கேள்விகள், நான் யார் ?, உலகை படைத்தது யார்?, உலகில் ஏன் வாழ்கிறோம் ?, வாழ்க்கை என்றால் என்ன ?, மரணம் என்றால் என்ன ? எம் நம்பிக்கை என்ன? நான் என்ன செய்ய வேண்டும்? இவ்வனைத்திற்கும் விடை அளிப்பதாகவே திருக்குர்ஆன் அருளப்பட்டது.
நபிகள் நாயகம் மனித குலத்திற்கு அருட்கொடையாக, வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்கின்றார்கள். மடமை காலத்து அரபு மக்களை உலகம் போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மக்கள் என போற்றும் அளவிற்கு உயர்த்தினார்கள். நபித்துவம் பெறுவதற்கு முன்பே அல்அமீன் உண்மையாளர் என நபிகளார் போற்றப்பட்டார். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் கூட தங்கள் பொருளை பாதுகாக்க நபிகளாரையே நாடினார். பெண்களுக்கு சொத்துரிமை, விதவைகளுக்கு மறுமணம், பெண்கள் இஸ்லாத்தின் கண்கள் என்று போற்றும் அளவிற்கு பெண் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம்.
இறைவன் வகுத்தளித்த சட்டமும், நபிகளாரின் வாழ்க்கை நெறியும் நமக்கு இருக்கின்றது. இந்த நன்முறை தான் ஷரீஅத் சட்டம். இச்சட்டத்தை இந்திய இஸ்லாமிய சமுதாயம் பேணி வாழ்வதற்கு பணியாற்றி வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இன்று சிலர் முஸ்லிம் லீக் என்ன செய்தது? எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாய்மூடிகள், அரசிற்கு பணிந்து பேசுபவர்கள் என்று விபரம் தெரியாமல் கூற தலைப்பட்டிருப்பதை அறிகிறோம். சிலருக்கு இதுவே வாடிக்கையாக இருக்கின்றது, உண்மைதான் வெல்லும். சுதந்திரத்திற்கு முன்பே இந்த நாட்டில் வக்ஃப் சட்டத்தை அறிமுகப்படுத்திய இயக்கம் முஸ்லிம் லீகும் தலைவர் காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னா சாகிப். அரசியல் நிர்ணய சபையின் ஷரீஅத் பாதுகாப்பிற்கு , சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நிலைகளிலும் உரிமைக்குரல் எழுப்பியவர்கள் காயிதெ மில்லத், பேக்கர் சாகிப் போன்றோர். டில்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா, அலிகர் சர்வ கலாசாலை கல்வி ஸ்தாபனங்களின் சிறுபான்மை முஸ்லிம் அந்தஸ்து நிலைபெற போராடியவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப்.
ஷாபானா வழக்கில் ஷரிஅத் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு வந்தபோது பல மணி நேரம் பாராளுமன்றத்தில் வாதாடி தனி நபர் மசோதாவாக கொண்ட வரப்பட்ட பனாத்வாலா பில் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள செய்த பெருமை முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாகிபை சாரும். சென்ற பாராளுமன்றத்தில் அனைத்து முஸ்லிம் எம்.பிக்களையும் பாரத பிரதமரிடம் அழைத்து சென்று இந்திய முஸ்லிம்களிள் கல்வி மற்றும் பொருளாதார உண்மை நிலையை வெளிபடுத்திய சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் அமைக்கப்பட்டதோடு மத்தியில் சிறுபான்மையினருக்கான தனி அமைச்சரகம் உருவாக காரணமாக இருந்தவர் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப்,
இன்றைய தேசிய தலைவர் இ. அஹ்மதின் முயற்சியால் இந்திய - அரபு உறவு மேம்படுத்தப்பட்டது, பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் லிபரான் கமிஷன் அறிக்கை மூலம் அனைவரும் தெரிந்திருக்கின்றனர். இவை அனைத்தும் எதோ நான் மேடைபேச்சுக்காக கூறுபவையல்ல, அனைத்தும் பாராளுமன்ற அவை குறிப்பில் எழுதப்பட்டிருக்கும் உண்மை .
அனைத்து நிலைகளிலும் பின்தங்கியிருக்க கூடிய சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருவது பாராட்டுக்குரியது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் தான் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்களின் நண்பன் என கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் 30 ஆண்டுகள் அங்கு ஆட்சியில் இருந்தும் என்ன பயன். ஆனால் 1959 ஆண்டிலேயே முஸ்லிம் லீக் அதிகாரத்தில் இருந்த கேரளத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விட்டது.
உலமா பெருமக்களை போற்றி கண்ணியப்படுத்துகின்ற இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 1958 ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டில் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே ஜமாஅத்துல் உலமா சபை, அம்மாநாட்டில் தான் அல்லாமா அமானி ஹஜ்ரத் உலமா சபை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வாகும்.
கட்டாய திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட விஷயத்தில் முஸ்லிம் லீகும் , ஜமாஅத்துல் உலமா சபையும் இரண்டு வேறு குரலாக பேசுவது போல் சிலர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர், அவர்களின் பகல் கனவு பலிக்கவில்லை இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஜமாஅத்துல் உலமா சபையும் ஒன்றினைந்தே ஷரிஅத் பாதுகாப்பு போராட்டம் உள்ளிட்ட மார்க்க விஷயங்களில் போராடி வெற்றி கண்டிருக்கின்றோம். இவ்விரண்டு அமைப்புகளும் சமுதாயத்தின் இரட்டை குலல் துப்பாக்கிகள் என்பதை உறுதியிட்டு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். யாரும் குழப்பம் அடைய தேவையில்லை.
கட்டாய திருமணச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டபோது அனைத்து அமைப்பினரையும் அழைத்து முதலில் முஸ்லிம் லீக் சார்பிலேயே கலத்தாலோசனை செய்யப்பட்டது.
சட்டமன்றத்திலும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏக்கள் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் தமிழக அரசு கலந்தாலோசனைகள் செய்ய வேண்டுமென பேசியிருக்கின்றனர். தொடர்ந்து பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வாயிலாகவும் தாய்ச்சபையின் நிலையை அரசிற்கு தெரிவித்திருக்கின்றோம். ஆத்திரப்பட்டோ, அவசரப்பட்டோ நம்மால் எதையும் சாதிக்க முடியாது அறிவுப்பூர்வமாக மதி நுட்பத்துடன் சட்ட ஆலோசனைப் பெற்று தீர்த்தமாக முடிவு எடுக்கலாம் என்ற அடிப்படையில் இன்று அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன. அடுத்த வாரம் தமிழக சட்ட அமைச்சர் உள்ளிட்ட சிறுபான்மை நல அதிகாரிகளுடனும், தொடர்ந்து முதல்வர் அவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள், ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் நடைபெற்று வருகின்றது. நம் ஐயப்பாடுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் தி.மு.க. பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மத்திய அரசு பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கென 2600 கோடி ரூபாய் வழங்கி இருப்பதற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். அரசின் திட்டங்கள் முழுமையாக நம் சமுதாயத்திற்கு சென்றடைய வேண்டுமென்றால் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் ,மஹல்லா ஜமாஅத்தினரும் முனைப்போடு பணிகளாற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை பெறுவதிலும், சிறு தொழில் உதவி , மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட அரசு திட்டங்கள் நாமும் அறிந்து சமுதாயத்தினரை பலனடையச் செய்ய வேண்டும்.
42 ஆண்டு காலமாக தொய்வின்றி இங்கு மீலாது பெருவிழா நடத்தி வரும் மேட்டுப்பாளையம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்விழாக்களில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளோடு சமூக நலப்பணிகளையும் செய்திட அன்புடன் வேண்டுகிறேன். முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணியில் கவனம் செலுத்தி, ஏற்கனவே 4 ஆயிரம் இருந்த இந்த ஊரில் குறைத்தது 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் . தலைமையின் ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு இருக்கும் என்பதை தெரிவித்து நிறைவு செய்கின்றேன்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசினார். நகர செயலாளர் அக்பர் அலி நன்றி வறி திண்டுக்கல் மௌலவி ஹாரூன் ராஷீத் தஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Friday, February 26, 2010

தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு தலைவர் காயிதெ மில்லத்! லிபரான் அறிக்கை விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. எழுச்சி உரை லிபரான் அறிக்கையின் மீதான


அவைத் தலைவர் அவர்களே!
பாபர் மஸ்ஜித் தகர்ப்பு குறித்து விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1992 டிசம்பர் 6ம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது மிகவும் கொடிய செயலாகும். இக்குற்றச் செயலைக் செய்தவர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்தை மட்டும் தகர்க்கவில்லை, மாறாக அரசியல் சாசனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கைகளையும் சேர்த்தே தகர்த்துள்ளனர். இந்த அவமானகரமான சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேதனையுடன் புறந்தள்ளிய பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு இக்கொடிய குற்றவாளி கூட்டத்தினர் பங்கம் இழைத்துள்ளனர்.
மஸ்ஜித் தகர்ப்பு சங் பரிவாரங்களும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி, பஜ்ரங் தன், பி.ஜே.பி, ஆகியவற்றால் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட சதிச் செயல்தான் என்பதை விபரான் கமிஷன் அறிக்கை வெளிக் கொணர்ந்துள்ளது. அது தானாகவோ, திடீரெனவோ நடந்தது அல்ல. மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட ஒன்று,. இந்த அறிக்கை 68 நபர்களின் தனிப்பட்ட குற்றச் செயல்களை வரையறுத்துள்ளது. இந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ள 68 நபர்களின் மீது என்ன வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய வரலாற்றிலே இது மிகவும் அவமானகரமான ஒரு செயலாகும்.
1995ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலே சொல்லப்பட்ட ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசிய ஜனநாயக முன்னனி ஆட்சியிலிருந்த போது அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான நபரை குறிப்பிட்டு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பாகும். அதிலே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாவ,
"""" இந்த செயல் ஒரு தேச அவமானம். தகர்க்கப்பட்டது ஒரு புரதான கட்டிடம் மட்டுமல்ல நீதியின் மீதும், பெரும்பான்மையினரின் நியாயமான நடவடிக்கைகள் மீதும் சிறுபான்மையினர் கொண்டிருந்த நம்பிக்கையும் தான். சட்டத்தின் ஆட்சி மீதும், அரசியல் சாசன நடைமுறைகளின் மீதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அது குலைத்துவிட்டது’’. இதுதான் உச்சநீதிமன்றம் கூறிய வார்த்தைகள்.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நேரத்திலே உத்திர பிரதேச மாநிலம் பி.ஜே.பி. யால் ஆளப்பட்டு வந்தது. அதன் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ன் முழு உதவியுடன் தான் தகர்ப்பு நிகழ்த்தப்பட்டது. அது தனியாக ஒரு இணை அரசை நடத்தியது என்பது லிபரான் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகர்ப்பு செயலுக்கு மிக முக்கியமான சக்தியாக அது பயன்படுத்தப்பட்டது.
பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்தும், சிறுபான்மையினர், அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் கூட, அப்பாவி மக்களை பாதுகாக்க காவல்துறைக்கு எந்த வித ஆணையையும் அவர் வழங்கவில்லை. இதன் பயனாக அனைத்து காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும், ஒட்டு மொத்த அரசு எந்திரமும் பாதுகாவலர்களாக இல்லாமல் சீருடை தரித்த """" கரசேவகர்களாக’’ பணியாற்றினர்.
ரகசிய கேமராக்களும், வெடி பொருள் கண்டுபிடிக்கும் கருவிகளும் அரசு நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள் வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட வில்லை.
அரசு முறைப்படி செய்யும் வீடியோ பதிவுகள் நிறுத்தப்பட்டன. ஊடகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. லிபரான் அறிக்கையின்படி ஊடக வியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு மிகச் சிறிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டனர். மானபங்கப்படுத்தப்பட்டனர். இது மிகவும் அவமானகரமான செயலாகும். இந்த நாட்டிற்க்கும் அதன் வரலாற்றுக்கும் துரோகமிழைக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நபர் இந்த நாட்டின் மிக உயரிய ஜனநாயக நிறுவனமான இந்த அவையின் உறுப்பினராக உள்ளார் ............ ( அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.)
இந்த செயலின் தளகர்த்தாவாக இருந்தவர் திரு. எல்.கே.அத்வானி. 1990ல் அவர் சோம்நாத்திலிருந்து அயோத்தியாவிற்கு நடத்திய ரத யாத்திரை நாடு முழுவதும் 3000 கலவரங்களை தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்னனர். """" டைம்ஸ் ஆப் இந்தியா’’ தன் தலையங்கத்திலே இது ரதயாத்திரை அல்ல """" ரத்த யாத்திரை’’ எனக் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட ஒரு அவமானகரமான நிகழ்ச்சி இந்த நாட்டிலே நடந்தது. பி.ஜே.பின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்தாலும் அன்றைய பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்கள் தன் அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக ரத யாத்திரையை ஆதரித்து விடவில்லை என்பதை நான் நினைவு கூர்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் செயலை அவர் ஆதரிக்காததால் அவர் தன் அரசாட்சியை இழக்க வேண்டியிருந்தது. அதை எதிர் கொள்ள அவர் சிறிதும் தயங்கவில்லை. வி.பி.சிங் அவர்களின் வீரத்தை இந்த நேரத்திலே நான் மெச்சுகிறேன்.
லிபரான் கமிஷன் முன்பும், மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எல்.கே. அத்வானி அவர்கள் முரன்படும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன் வாழ்நாளிலே மிகுந்த துயரமளித்த சம்பவம் என்றார். மற்றொரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன்னுடைய கட்சியின் ஓட்டு வங்கியை பெரிதாக்கியுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மற்றொரு சமயம் நாமர் கோவில் இயக்கம் இந்துக்களின் பெருமையை பறை சாற்றுகிறது என்றார். இந்து மத உணர்வுகளில் நஞ்சு கலக்கும் அவர் செயலை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர் உணர வேண்டும்.
இந்த நாட்டின் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை குலைப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி, பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் வங்கிக் கணக்குகளில் மிகச் பெரும் தொகையில் பண பரிவர்த்தனை நடக்கிறது. பல்வேறு சமயங்களில் அவர்களின் கணக்குகளில் பல கோடி ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இப்படிப்பட்ட ஒரு கொடுங் குற்றச் செயலை நிறைவேற்ற வேண்டி கோடி கோடியாய் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டது? யார் இதை உபயோகப்படுத்தியது? எப்படி உபயோகப்படுத்தப்பட்டது? இந்த எல்லா உண்மைகளும் இந்த தேசத்துக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்த அனைத்து வழக்குகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒரே நீதிமன்றத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்திலே நான் என் உரையை முடிக்கு முன்னர் தேசத் தலைவர் ஒருவர் சமூக நல்லிணகத்தை எப்படி மதித்தார், எப்படி நடந்து கொண்டார் தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.
சுதந்திரத்தின் போது நாடு பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் உருவான பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீகின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை காப்பாற்ற குரலெழுப்பினார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் முஹம்மது அலி ஜின்னா விடம் """" நீங்கள் வெளிநாட்டவர் . நீங்கள் இந்தியாவின் மைந்தன் அல்ல. இந்திய குடிமகனும் அல்ல. நாங்கள் இந்திய குடிமக்கள் . நாங்கள் இந்திய நாட்டின் மைந்தர்கள். சிறுபான்மையினர் விவகாரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். சிறுபான்மையினர் பிரச்சினைகளை எப்படி அனுகுவது என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் அயல் நாட்டிலே இருக்கிறீர்கள் நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகத்தை குறித்து பேச வேண்டாம். அப்படி சிறுபான்மையினர் குறித்து பேச வேண்டியது நியாயமே என கருதினால் உங்கள் நாட்டில் வாழும் இந்துக்கள், கிருஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் பற்றி யோசியுங்கள். நீங்கள் உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்னைகளை குறித்து கவலைப்படுங்கள். இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் அல்லது முஸ்லிம் சமூகம் குறித்து ஏதும் பேச வேண்டாம். எங்கள் தாய்நாட்டிலே ஏற்படும் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கும் துணிவு எங்களுக்கு உள்ளது’’ என்றார். இதுதான் தேசப்பற்று - இதுதான் தேசியம் - இதுதான் சமூக நல்லிணக்கம் - இதுதான் இந்த நாட்டின் தலைவர்கள் காட்டிய சமூக ஒற்றுமை. இங்கே உள்ள அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட நடத்தையை பார்த்து பாடம் கற்றக்கொள்ள வேண்டும்.
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் ஒரு மதத்தாரின் வழிபாட்டுத் தலத்தை உருவாக்குவதற்காக மற்றொரு சாராரின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுவதில்லை. நம் இந்திய மக்களிடம் இத்தகைய கலாச்சாரம் இல்லை. இந்தியா சமயச் சார்பற்ற நாடு - எந்த மதமும் இன்னொரு மதத்திற்கு எதிரானது அல்ல - ஒரு மதத்தின் நெறிகளுக்கு எதிராக இன்னொரு மதம் நெறியற்ற முறையை தருவதில்லை. எல்லா மதங்களுமே அறநெறிகளையே போதிக்கின்றன. நாம் மதங்களின் பெயரால் வேறுபடலாம். ஆனால் அறநெறிகளின்படி நாம் எல்லோரும் சகோதர, சகோதரிகள் .
நான் ஒரே ஒரு கருத்தை உங்களின் பரிசீலனைக்கு வைத்து முடிக்க விரும்புகிறேன். பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள சில நபர்களின் கோபத்தின் வெளிப்பாடாக சில கோவில்கள் அங்கே சிதைக்கப்பட்டன.................... ( குறுக்கீடுகள்) ....... உடனடியாக அவற்றை சரி செய்து விடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.................... ( குறுக்கீடுகள்) ....... இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல என்பதை நாம் நன்றாக அறிவோம். இருந்தபோதும் பாகிஸ்தான் அரசு சிதைக்கப்பட்ட கோவில்களை உடனடியாக புணரமைக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது................... ( குறுக்கீடுகள்) ....... கோவில்களை புணரமைத்தது மட்டும் அல்ல, அவற்றை மீண்டும் இந்து சமூகத்தினரிடம் ஒப்படைக்கும் போது நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் திரு அத்வானி அவர்களும் சென்றிருந்தார். ................... ( குறுக்கீடுகள்) ....... புணரமைக்கப்பட்ட கோவில்களின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். நம்முடைய நாடு சமய சார்பற்ற நாடாக இருப்பதால் அதே போல தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித்தும் அதே இடத்திலே மக்களால் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என இந்த மேலான அவையிலே வேண்டுகோள் வைக்கிறேன். அதற்கு அத்வானி அவர்கள் தலைமை ஏற்றால் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். இந்திய வரலாற்றிலே இப்படிப்பட்ட சமயச் சார்பின்மை - இப்படிப்பட்ட சமூக நல்லிணக்கம் - இப்படிப்பட்ட சமூக ஒற்றுமை நிறுவப்பட வேண்டும். இது அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு புதிய சகாப்தமாக இருக்கும். உலக நாடுகளின் முன்னால் நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இது மிகவும் பெருமை தருவதாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்திலே நான் மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன். மதத்தின் பெயரால் மத வழிபாட்டு முறையின் பெயரால் மக்களிள் சகோதரத்துவத்தை மாறுபடுத்தாதீர்கள்.................... ( குறுக்கீடுகள்) ....... எல்லா மதங்களும் அறநெறிகளையே போதிக்கின்றன. எல்லா மதங்களும் மக்களை சகோதர சகோதரிகளாக வாழவே பயிற்று விக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை கொள்கையை மாநில பேதமின்றி - கட்சிபேதமின்றி நம் உறுப்பினர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டும்.
இந்த விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை எடுத்து வைக்க வாய்ப்பு அளித்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யுடன் உங்களின் உஸ்மான்

வௌ;ளையர் ஆதிக்கத்தை எதிர்த்த வரலாற்று நாயகன் கான்சாஹிபின் வாரிசுகள் வறுமையில் வாடும் அவலம்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் நேரில்




இந்தியச் சுதந்திரப் போர் வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ள வர லாற்று நாயகன் மருத நாயகம் கான்சாஹிபின் வாரிசுகள் வறுமையின் கோரப் பிடியால் அல் லல்பட்டுக் கொண்டிருக் கும் அவல செய்தி தெரிய வந்தவுடன் இந் திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமை அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றும் நடவடிக்கையை மேற் கொண்டதுடன், அவர் களின் அவலநிலையை அரசின் பார்வைக்கு கொண்டு சென்று அரசு உதவிகளை பெற்றுத் தரவும் உரிய முயற்சி களை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு-
முகலாயர் ஆட்சிக் காலத்தில் தென்இந்தியா வில் வரிவசூலிப்பதற்காக நியமிக்கப்பட்டவர் கான்சாஹிப் துரை. பின்னர் 1759 முதல் 1764 வரை மதுரையை ஆண்ட தால் அவருக்கு ஹமருத நாய கம்’ என்ற பட்டப் பெயர் ஏற்பட்டது.
மதுரை பகுதியில் வசூலிக்கும் வரிகளில் ஒரு பகுதியை தங்களுக்கு கப்பமாக கட்ட வேண்டும் என அங்கிலேயர் அவரை நிர்ப்பந்தித்தனர். ஆனால்,. கான்சாஹிபு ஆங்கிலேய ரின் உத்தரவுக்கு கட்டுப் படாமல், அனியருக்கு வரி செலுத்தத் தேவையில்லை. அப்படி செலுத்த முடி யாது என அறிவித்தார். இதனால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள் கான் சாஹிபு மீது போர் தொடுத் தனர். இறுதியில் கான் சாஹிபை கொடூரமான முறையில் கொலை செய்த னர். மேலும், அவரது (அர சாங்க) சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இப்படி வௌ;ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரப்போர் புரிந்து மரண மடைந்த வரலாற்று நாயகன் கான்சாஹிபு மருத நாயகத்தின் வாரிசுகள் இன்று வறுமையின் கோரப்பிடியில் அல்லல் பட்டு வரும் விபரமும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய பலன் கிடைக்காததாலும், வறுமையின் காரணமாக வும் வாழ முடியாத பரிதாப நிலையும் தெரிய வந்தது.
இதனைக் கண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கான் சாஹிபு வாரிசுகளின் வறுமை நிலையைப் போக்க முடிவு செய்தனர்.
முதல் பணியாக விருதுநகர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கான்சாஹிபின் வாரிசுக ளை சந்தித்து அவர்க ளுக்கு ஆறுதல் கூறி தேற்ற செய்தனர். அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சிவகாசி மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹிம்சா தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் எஸ். அப்துல் ரஹீம், மாவட்டப் பொரு ளாளர் ஏ.எம். முஹம்மது சிவகாசி நகரப் பொரு ளாளர் ஏ.எம். முஹம்மது உசேன், நகர துணைத் தலைவர் எம். குத்புதீன் உள் ளிட்ட குழுவினர் உடனடி யாக களத்தில் இறங்கி, கான்சாஹிபு வாரிசுகள் வாழும் பகுதியான கிருஷ் ணன் கோவில் பகுதி முழுவதும் அலைந்து திரிந்து பலரிடமும் எந்த தகவலும் கிடைக்காமல் இறுதியாக ஊரின் ஒதுக் குப்புறத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத சிறிய வீட்டில் வாழும் கான்சாஹிப் வாரிசு செய்யது திவான் என்ற பாபா சாஹிப் மற்றும் அவரது குடும்பத்தினரை கண்டு உரையாடி ஆறுதல் களை கூறி தேற்றியதுடன், அவர்களின் அவல நிலைகள் குறித்து தமிழக அரசுக்கும், முதல்வர் கலைஞரின் கனிவான பார்வைக்கும் கொண்டு சென்று, அரசு உதவி களை பெற்றுத்தர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சிகளை மேற் கொள்ள இருப்பதாக உறுதி அளித்தனர்.
இதனால் பெரிதும் மகிழ்ந்த அவர்கள், தங்கள் இன்னல் தீரும், இன்பம் சூழும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளனர்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் மாமன்னர்களின் வாரிசு களுக்கு பல்வேறு சலுகை களையும், ஓய்வூதியமும் வழங்கும் நடவடிக்கை மேற் கொண்ட முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு கான்சாஹிபின் வாரிசுகள் வாழ்விலும் விளக்கேற்றும் என்று அனைவரும் எதிர்பார்க் கின்றனர்.
-

இலங்கை வெலிகமையில் மீலாதுந் நபி பெருவிழா: தலைவர் பேராசிரியர் இலங்கைப் பயணம்


இலங்கை வெலிகமையில் அத்தரீக்கத்துல் ஹக்கியத் துல் காதிரிய்யா சார்பில் மீலாதுந்நபி பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி மாலையும் 28-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 8 மணி வரையும் நடைபெற உள்ள விழாவில் சங்கைக்குரிய உலமாக்களும், அறிஞர் பெருமக்களும் உரையாற்ற உள்ளனர்.
இந் நிகழ்ச்சியில் குத்புல் ஃபரீத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் அறபு - தமிழ் அகராதி நூல் வெளியிடப்படு கிறது.
தமிழகத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், காயல்பட்டினம் மவ்லவி எச்.ஏ. அஹமது அப்துல் காதிர் ஆலிம், சென்னை மவ்லவி ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, திருச்சி மவ்லவி இப்ராஹீம் ரப்பானி, மவ்லவி ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
அறபு - தமிழ் அகராதி நூலை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டு சிறப்புரையாற்று கிறார்.
மார்ச் 1-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஜ்வர் தலைமையில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து நிருபர் சந்திப்பும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காயல் ரபீக் உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆகியோர் 4 நாட்கள் பயணமாக (பிப்.28, மார்ச் 1, 2) இலங்கை செல்கின்றனர்.

இரயில்வே இணை அமைச்சடன முஹம்மது உஸ்மான்்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் வலைதளத்தில் தொடர்பு கொள்ள வேண்டுகோள்




இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கான வலை தளத்தில் கட்சித் தொண் டர்களும், பொது மக்களும் கேட்கும் கேள்விகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வேத் துறை யின் இணைய மைச்சரு மான இ.அஹமது பதில் சொல்கிறார். எனவே, தொண்டர்களும், பொது மக்களும் கேள்விகளை வலைதளம் மூலம் அனுப்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்டுக்கொண் டுள்ளது.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது-

சமீபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு றறற.iனேயைரேiniடிnஅரளடiஅடநயபரந.in என்ற வலை தளம் தொடங் கப்பட்டது. குறுகிய காலத் தில் அந்த வலைதளம் மிகவும் பிரசித்திப் பெற்று விட்டது. அதன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அந்த வலை தளத்தை மக் களுக்கு நெருக்கமானதாக ஆக்கவும், பொது மக்க ளுக்கு தொடர்புடையதாக ஆக்கவும் முடிவு செய்யப் பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை களை பரப்ப அந்த வலைதளத்தை தொடர்பு கொள்ளவும், அறிவார்ந்த தொண்டர்களுடன் கலந் துரையாட கட்சியின் தேசி யத் தலைவர் இ.அஹமது அன்புடன் விருப்பம் தெரிவித்துள்ளார். கட்சி யினுடைய நடவடிக்கை கள், கொள்கைகள், செயல் திட்டங்கள் போன்றவை பற்றி கேட்கப்படும் கேள்வி களுக்கு அவர் பதில் அளிப்பார். .

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அப்பாற் பட்ட விஷயம் குறித்து கேட்பர்களுக்கும் அவர் பதில் சொல்கிறார். ஆனால், தேவையற்ற கேள்விகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கேள்விக்குப் தேசியத் தலைவர் இ.அஹ மது பதில் அளிப்பார்.

எனவே, உங்களது கேள்விகளை மேற்கண்ட முஸ்லிம் லீக் வலைதளத் துக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் கேள்விகள் பய னுள்ளதாகவும், சுருக்கமாக வும் அமைந்திருத்தல் அவ சியம். உங்களுக்கு தகுந்த பதில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருக்கிறது.

வழிகாட்டிய மாநபியின் வாழ்க்கை நெறியில் வழிநடப்போம்! - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

உலகத்திற்கு என்றும் தேவைப்பட்ட அமைதியும், சாந்தி சமாதானமும், சமூக நீதியும், பொருளாதார சமத்துவ வாழ்வும் வழங்கி உலக சமுதாயத்திற்கு புதியதோர் வழிகோலிய நெறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக்காட்டிய மனிதநேய மானிட மார்க்கமாகும்.
பெர்னாட்ஷா போன்ற உலக அறிஞர்கள் நபி வழியே நானிலத்தாருக்கு நல்வழியாக அமையும் என கூறியிருக் கிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஹஇஸ்லாமிய மார்க்கம், ஹகாணாமல் போன குழந்தை திருவிழாவில் கண்டெடுத்ததைப்போல் தென்னக மக்களால் அரவணைக்கப்பட்டது’ எனக் குறிப்பிட்டார்.

ஹஒன்றே குலம், ஒருவனே தேவன்’ ஹயாதும் ஊரே, யாவரும் கேளிர்’, ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் கொள்கையை இன்றைக்கு முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் நிலைநிறுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய நற்பெரும் மேன்மக்கள் வாழ்த்தி வரவேற்கும் வாழ்க்கை நெறியே வள்ளல் நபி நாயகம் அவர்கள் உலகத்தாருக்கு வழங்கிய நன்னெறியாகும். அந் நெறியில் எல்லோரும் உறுதி கொள்வோம்.

தமிழக அரசும், மத்திய அரசும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நாளை அரசு விடுமுறை தினங்களாக அறிவித்து கண்ணியப்படுத்தியுள்ளன. முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் நபிகள் நாயகத்தின் பெருமைகள் இந் நந்நாளில் போற்றப்படுகின்றன.
மனித குலத்திற்கே வழிகாட்டிய நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நெறியை பின்பற்றி நடக்க இந் நன்னாளில் உறுதியேற்போம்.

- பேராசிரியர் கே.எம். காதர் மொகின்,
தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு

Indian Union Muslim League President K.M. Kader Mohideen

Indian Union Muslim League General Secratery K.A.M. Muhammed Abubacker

Usman Images

A. Muhammed Usman

A. Muhammed Usman

A. Muhammed Usman

36, Maraikayar Lebbai St,

Chennai - 600 001

Cell: 9944 74 1315